இலவச வீட்டு மனை
பொது உபயோகத்திற்கு தேவைப்படாத அரசு நிலங்களை வீடு இல்லாதவர்களுக்கு நிலமாக தருவது தான் வீட்டு மனை நில ஒப்படை ஆகும். வீட்டு மனைக்கான விண்ணப்பங்களை தாசில்தாரிடம் கொடுக்க வேண்டும். வீட்டில் உள்ள பெண் உறுப்பினர்களின் பெயரில் தான் வீட்டு மனை நில ஒப்படை வழங்கப்படும். வீட்டு மனை ஒப்படை வருவாய் நிலை ஆணை எண் 21ன் கீழ் வழங்கப்படுகிறது. முதலில் வீட்டு மனை இல்லாதவர்களை அரசு கிராம வாரியாக பிரித்துக் கொள்கிறது. வீட்டு மனை கேட்டு வரும் மனுக்களின் தகுதி அரசால் ஆராயப்பட்டு விதிகளுக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் ஒழுங்குபடுத்தப் படுகிறது. ஆட்சேபனையற்ற அரசு நிலங்களே அரசால் தேர்வு செய்யப்படுகிறது. தகுதியான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை நில அளவையர் மூலம் ப்ளாட்டுகளாக பிரிக்கப்பட்டு கற்கள் நடப்படுகிறது. யாருக்கு முன்னுரிமை :- வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தற்போதைய ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ. 30,000/-க்கும் குறைவாக உள்ளவர்களுக்கும், நகர்ப்புறங்களில் ரூ. 50,000/-க்கும் குறைவாக உள்ளவர்களுக்கும் நில ஒப்படை வழங்கப்படும். மேலும் வீட்டு மனை கோரும் நபர்களுக்கு வே...