மனைவி பொய் குற்றச்சாட்டுகளினால் தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கின்றார்
என்னுடைய மனைவி என் மீது பொய் குற்றச்சாட்டுகளினால் என்னை தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கின்றார், அவர் தனது பெற்றோரிடம் நான் அவரை அடிப்பதாகவும் துன்புறுத்துவதாகவும் அவரைப் பற்றி அவதூறாக வெளியே சொல்வதாகவும் எனது மனைவியை சந்தேகப்படுவதாகவும் ஒவ்வொருவரிடம் கூறுவேன் என்று சொல்லி என்னிடம் தொடர்ந்து பிளாக்மெயில் செய்து வந்து கொண்டிருக்கின்றார். இதற்கு சட்டப்படியான தீர்வு ஏதாவது இருக்கிறதா?
நம்முடைய நாட்டு சட்டங்கள் பெண்களுக்கு சாதகமாக பல அம்சங்கள் இருப்பதினால் பெண்கள் அதை தங்களுக்கு சாதகமாக வைத்துக் கொண்டு இவ்வாறாக மிரட்டல் செயல்களிலே தன்னுடைய கணவரிடத்தில் ஈடுபடுகின்றார்கள். கிட்டத்தட்ட இத்தகைய செயல்கள் எல்லாம் ஒரு மனிதனுக்கு மன உளைச்சலை கொடுக்கக் கூடிய செயல்களாக தான் நீதிமன்றம் கருதும். ஒருவேளை உங்களுடைய மனைவி செய்கின்ற அனைத்து செயல்களும் நீங்கள் அவருடன் வாழ்வதற்கான சூழல் சரிவர இல்லாமல் போகுமே ஆனால் உங்களுக்கு அவற்றை கையாள்வதற்கு இரண்டு விதமான திட்டங்கள் இருக்கின்றன. ஒன்று உங்கள் மனைவியுடன் இருக்கின்ற அனைத்து பிரச்சனைகளையும் ஒரு தீர்வுக்கு கொண்டு வந்து சமரசமாக சென்று பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது. அப்படி ஒரு சமரச முயற்சிக்கு வர முடியாத ஒரு நிலை வருமே ஆனால், அப்படிப்பட்ட ஒரு மனைவியுடன் வாழ்வது உங்களுடைய மனநலத்திற்கு உடல் நலத்திற்கும் தீங்கு நேரிடும் என்று நீங்கள் கருதுவீர்கள் ஆனால் நீங்கள் நீதிமன்றத்தை அணுகி நிரந்தரமாக தெரிந்து கொள்வதற்கு முயற்சிகள் எடுக்கலாம். அதற்கு ஆங்கிலத்திலே ஜுடிஷியல் செபரேஷன் என்று கூறுகிறார்கள். அதாவது நீங்கள் விவாகரத்து பெற வேண்டிய அவசியம் இல்லை அப்படிப்பட்ட ஒரு சூழலில் உங்கள் மனைவி மூலம் ஏற்படுகின்ற எல்லா விதமான தீமையான காரியங்களில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்வதற்கு ஒரு நிரந்தர பிரிவினை கேட்பதுதான் ஜூடிசியல் செபரேஷன்.
அவ்வாறாக நீங்கள் ஒரு தீர்வினை நீதிமன்றத்தில் மூலம் கிடைக்கும் என்றால், உங்கள் மனைவிக்கு மனைவி என்கின்ற அந்தஸ்து தொடர்ந்து கொண்டிருக்கும். ஒரு வேலையை அந்த மனைவி என்கின்ற அந்தஸ்துக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் மேற்கூறிய காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் நிரூபித்து விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம்.
You can sent your queries to the authour at Whattsapp Number : 9962999008.
Comments
Post a Comment