அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அண்ணனின் மீது தம்பி மனைவி வரதட்சணை கொடுமை புகார். தீர்வு என்ன?

எனது கணவர் கடந்த இரண்டு வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். அவருடைய தம்பியின் மனைவி வரதட்சணை புகாரில் என்னுடைய கணவருடைய பெயரையும் சேர்த்து இருக்கின்றார். இதற்காக என்னுடைய கணவர் இந்தியா சென்று முன் ஜாமின் பெற வேண்டுமா? இன்று நம் நாட்டில் பொதுவாக வரதட்சணை புகார் என்றால் மாமியார் மாமனார் கணவனுடைய சகோதர சகோதரிகள் ஆகியோர்களை சேர்த்து புகார் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. காவல் நிலையத்தில் புகாரை பெற்றுக் கொண்ட பிறகு அதில் உண்மை தன்மை இருக்கிறதா என்று ஆராய்ந்த பிறகு காவலர்கள் அந்த புகாரினை வரதட்சணை புகார்களாக பதிவு செய்வார்கள். அப்படி இருக்கின்ற பட்சத்தில் அது எஃப் ஐ ஆர் ஆக மாறுகின்ற பொழுது, எந்த நேரத்திலும் அந்த குற்றச்செயலிலே ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை பாய வாய்ப்பிருக்கிறது. ஆகவே அதனை தடுப்பதற்கு நாம் உண்மையிலேயே அத்தகைய குற்ற செயலில் ஈடுபட்டு இருக்கிறோமா அல்லது இல்லையா என்பதை விட ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றத்தை அணுகி மேற்படி வழக்கில் தங்களை கைது செய்யக்கூடாது என்று முன் பிணை பெற்று இருப்பது நல்லது. அவ்வாறாக முன்பினை பெறாத பட்சத்தில் அந்த எஃப் ஐ ஆர் இல் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைதாவது வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை நீங்கள் அந்த புகாரிலேயே குறிப்பிட்டது போல யாதொரு குற்றமும் செய்யாத இருப்பீர்களானால் அதற்கான முகம் தாரம் உங்களிடம் இருக்குமேயானால் நீங்கள் அந்த மாநிலத்தில் இருக்கின்ற உயர்நீதிமன்றத்தை அணுகி அதனுடைய சிறப்பு சட்டப்பிரிவை பயன்படுத்தி உங்களை அந்த குற்ற வழக்கில் இருந்து விடுவித்து கொள்வதற்கு மனு செய்யலாம். You can make queries to the authour at his whatsapp Number: 9962999008.

Comments

Popular posts from this blog

How to get money from the savings account of a death person

When you buy a New Car?

What are the factors for Mental cruelty which is a immediate cause for Divorce.